We Give Everything First

Wednesday, July 1, 2020

விவசாயத்துறையில் மாபெரும் சாதனை.. பிரம்மிக்க வைத்த ஜி.டி.நாயுடு..!!

ழூ ஜி.டி.நாயுடு பற்றிய முந்தைய தகவல்கள் நமது நித்ரா நாட்காட்டியின் முதல் பக்கத்தில் உள்ள கதைகள்ஃகட்டுரைகள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.ஜி.டி.நாயுடு விவசாயத்துறையில் செய்த சாதனைகள்..!!

🌟 பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையை கேட்டும் வழங்க மறுத்த ஜி.டி.நாயுடு, அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியை கோரினார். ஆனால், இந்திய அரசாங்கம் இவருடைய கோரிக்கைக்கு செவி மடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது.

🌟 இதனால் மனம் உடைந்துப்போன ஜி.டி.நாயுடு, ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.


🌟 இதற்கு ஜி.டி.நாயுடு கூறிய காரணம் : 'ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்தியா, ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்" என்றார்.


🌟 தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும், இந்தியர்கள் யாராக இருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார் ஜி.டி.நாயுடு.

விவசாயத்துறை :

🌟 ஜி.டி.நாயுடு இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளை புரிந்தார். இவர் போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வு பண்ணை ஒன்றை அமைத்தார். அதை பார்க்க நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், பொறியியல் மாமேதை விஸ்வேஸ்வரய்யா உட்பட பல அறிஞர்கள் அங்கு வந்திருந்தனர்.

🌟 இங்கு பூசணிக்காய் அளவுக்கு பெரிதாக காய்க்கும் பப்பாளி...

🌟 1,000 காய்கள் கொண்ட வாழைத்தார்...

🌟 விதைகளில்லா நார்த்தங்காய்...

🌟 விதைகளில்லா ஆரஞ்சுப் பழம் என பலவற்றை உருவாக்கி காட்டினார் ஜி.டி.நாயுடு.

🌟 சோளச்செடிகளுக்கு ஊசிமூலம் மருந்து செலுத்திய ஜி.டி.நாயுடு, செடியை நட்டு சிறிது நேரத்திலேயே 26 கிளைகளுடனும், 39 கதிர்களுடனும், 18 அடி உயரத்திற்கு வளரச் செய்தார். சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள் வரை இருந்தன.

🌟 அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரம்மிக்க வைத்தன. 11 அடி உயரம் வளர்ந்து 24 ராத்தல் பருத்தியை கொடுத்த அவரது அதிசய பருத்திச் செடிக்கு 'நாயுடு காட்டன்" என்று ஜெர்மானியர்கள் பெயர் சூட்டி கௌரவித்தனர்.

ஜி.டி.நாயுடுவின் இன்னும் பல அரிய கண்டுபிடிப்புகளை பற்றி நாளைய பகுதியில் பார்க்கலாம்..!!சாமானியர்கள் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர்கள் பலர். இவர்களால் மட்டும் இது எப்படி சாத்தியமானது என்று கேள்வி கேட்க தோன்றுகிறதா?

No comments:

Post a Comment