👉 1938ஆம் ஆண்டு தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார் ஜி.டி.நாயுடு.
👉 ஜி.டி.நாயுடு அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் இந்தியர்கள் யாராகயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிக்கைவிட்டார்.
👉 தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன்பெற வேண்டுமென்று விரும்பிய ஜி.டி.நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார்.
👉 தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்கு தேவை என்று வலியுறுத்திய ஜி.டி.நாயுடு 1945-ல் ஆர்தர் ஹோப் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியை தொடங்கி, 1949ஆம் ஆண்டு அதையும் அரசாங்கத்திற்கு இலவசமாக கொடுத்தார்.
👉 தன்னுடைய சுயமுயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். அக்கல்லூரி தான் தற்போது அரசினர் தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் (புஊவு) என அறியப்படுகிறது.
👉 நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும், நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.
👉 இந்தியாவிலேயே முதன்முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை இவரையே சாரும்.
👉 ஜெர்மனி நாட்டின் வெய்லர் நிறுவனத்துடன் இணைந்து 1966ல் ஜி.டி.நாயுடு நிறுவிய ஜி.டி.வெய்லர் கூட்டு நிறுவனம், கடைசல் இயந்திரம், ஆட்டோமேடிக் லேத் போன்ற நவீன இயந்திரங்களை உருவாக்கி, கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது.
புத்தகப் பிரியர் :
👉 ஜி.டி.நாயுடுவிற்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். வெளிநாட்டு பத்திரிக்கைகள் படித்து, தேவையான தகவல்களை குறிப்பு எடுத்து கொள்வார். 'நூல்களை போல் வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள் இல்லை" என்பது இவர் கருத்து. படிப்பதற்காகவே ரயில் பயணங்கள் போவார்.
👉 ஒருசமயத்தில் இவரிடம் 80 ஆயிரம் மதிப்புள்ள 30,000 நூல்கள் இருந்தது. அந்த புத்தகங்களையும், பத்தாயிரம் ரூபாய் நன்கொடையையும் கோவை நகராட்சிக்கு கொடுத்தார். இளம்வயதில் இவர் பாடப்புத்தகங்களை வெறுத்தவர். படிப்பின் மேல் நாட்டம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment