
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தற்போது உலகெங்கும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றால் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (MGREEE) ரத்து செய்யப்படுகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை மாணவ மாணவியர் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். மாணவ மாணவியர் தங்களின் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு தகுந்த பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். JEE(Main) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.
பொறியியல் சேர்க்கை தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள பல்கலைக்கழகத்தின் www.drmgrdu.ac.in இணையத்திலோ அல்லது 74012 20777 / 21777 மற்றும் 78239 44325 / 44326 தொலைபேசி எண்களையோ தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment