We Give Everything First

Saturday, July 18, 2020

இந்தியாவின் முதல் கரோனா தடுப்பூசி கோவேக்ஸின் மனிதர்களுக்கு வழங்கிய பரிசோதனையில் முன்னேற்றம்




தெலங்கானா தலைநகர் ஹைதரா பாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கரோனா வைரஸுக்கு கோவேக்ஸின் என்ற தடுப்பூசியை அண்மையில் கண்டுபிடித்தது. இது இந்தியாவின் முதல் கரோனா தடுப்பூசியாகும். விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பரி சோதனைகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு பரிசோதிக்கப்படுகிறது. 


நாடு முழுவதும் 12 மருத்துவ மனைகளில் பரிசோதனை நடை பெறுகிறது. இந்த பரிசோதனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில், பிரித்தெடுக்கப்பட்ட கரோனா வைர ஸின் மரபணுக்களை அடிப்படை யாக வைத்து பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசியை தயாரித் துள்ளது. அதாவது ஆய்வகத்தில் கரோனா வைரஸின் வீரியம் முழு வதுமாக அழிக்கப்பட்டுள்ளது. 


இவை கொல்லப்பட்ட கிருமிகள் ஆகும். இவற்றை பயன்படுத்தி தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக் கிறது. இந்த தடுப்பூசியை மனித னின் உடலில் செலுத்தும் போது எவ்வித ஆபத்தும் ஏற்படாது. கரோனா வைரஸை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.


பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அங்கு 10 பேர் பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட் டுள்ளது. 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தடுப்பூசி போடப்படும். இதன்பிறகு ஏதாவது பக்கவிளை வுகள் ஏற்பட்டிருக்கிறதா என்பது ஆய்வு செய்யப்படும்.
 

ஹரியாணாவின் ரோத்தக்கில் உள்ள மருத்துவ அறிவியல் கழகத் திலும் கோவேக்ஸின் மனிதர் களுக்கு செலுத்தப்பட்டு பரி சோதனை செய்யப்படுகிறது. அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூறும்போது, ‘‘தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்தார். 


டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், ஹைதராபாத் நிஜாம் உள்ளிட்ட 12 மருத்துவமனைகளில் கோவேக்ஸின் தடுப்பூசி பரி சோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் 375 பேரும், இரண்டாம் கட்ட பரிசோதனையில் 750 பேரும் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment