We Give Everything First

Sunday, July 12, 2020

பல்கலைக் கழக தேர்வுகளை நடத்தாவிட்டால் நடவடிக்கை!: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை!!!



பல்கலைக் கழக தேர்வுகளை நடத்தாத மாநில அரசுகள் சட்டபடியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே, பல்கலைக் கழக தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று கூறியுள்ளார். 

அவ்வாறு ரத்து செய்யும் மாநில அரசுகள் மீது சட்டபடியான நடவடிக்கைகளை எடுக்க பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பள்ளி கல்வி, மாநில அரசுகளின் பட்டியலிலும், உயர் கல்வி பொதுப்பட்டியலிலும் இடம்பெற்றிருப்பதை அமித் கரே சுட்டிக்காட்டி இருக்கிறார். பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பின்னர், முதல்முறையாக டெல்லி அரசு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. 


முன்னதாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே தேர்வை ரத்து செய்துள்ளன. பாஜக ஆட்சியில் இல்லாத பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் பல்கலைக் கழக தேர்வுகளை நடத்த முடியாது என்பது குறித்து, மத்திய அரசுக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள்ளன.


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மத்திய அரசின் முடிவால் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறியுள்ளனர். மாணவர்கள் கடந்த காலங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதனால் தமிழ்நாட்டில் பல்கலைக் கழக தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment