We Give Everything First

Tuesday, May 19, 2020

இந்த காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

இந்த காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் எது தெரியுமா?



Samsung Galaxy A51, 2020 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் என்ற பட்டத்தை வென்றது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஷாவ்மியின் Redmi 8 உள்ளது. சாம்சங், ஜனவரி முதல் மார்ச் 2020 வரை மொத்தம் 6 மில்லியன் கேலக்ஸி ஏ 51 போன்களை விற்பனை செய்தது. பட்டியலில் மூன்றாம் இடத்தில் Galaxy S20+ உள்ளது.

டூயல்-சிம் சாம்சங் கேலக்ஸி ஏ 51, நிறுவனத்தின் ஒன்யூஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இந்த போனில் 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு எக்ஸினோஸ் 9611 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி ஏ 51 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 51-ல் 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளது.



7/10




Source: Internet

No comments:

Post a Comment