✅இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
✅இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது.
✅முக்கிய தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தனியார் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஆன்லைன் மூலமாக நடத்த தொடங்கிவிட்டன. ஒரு சில அரசு பள்ளிகளும் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகின்றன.
✅இந்த ஆன்லைன் வகுப்பு குறித்து சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனையடுத்து தற்போது அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த விதிமுறைகள்:
✔எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
✔1 முதல் 8ம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும்.
✔9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம்.
No comments:
Post a Comment