We Give Everything First

Wednesday, July 15, 2020

மாலை கல்லூரி உருவான வரலாறு..




ஒரு முறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து...
தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், எனக்கு கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டராம்....

காமராஜர் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு கேட்க...
கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்கு தான் Lab வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணை சேர்க்க இயலாது என்று சொல்ல....


காமராஜர்...
உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள் ?
என்று கேட்டாராம்...


அந்த முதல்வர் 4 பேருக்கு என்று சொல்ல, இன்னும் 4 பேர் வந்தால் என்ன செய்வீர்கள்...
அதற்கு அந்த முதல்வர் இல்லை ஒரு முறை சாதம் செய்து விட்டு இரண்டாம் முறையும் செய்வேன் என்று சொன்னாராம்....


அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக்கூடாது. 3.30 க்கு கல்லூரி முடிந்ததும், இன்னும் 12 பேருக்கு கல்லூரி வைத்து, அதே Lab ஐ பயன்படுத்தலாமே என்று சொல்ல, அப்படி பிறந்தது தான் மாலை கல்லூரி Evening College.

முடியாது என்று சொல்வதை விட தீர்வை நோக்கி பயணிப்பதே மக்கள் பணி என்பதற்கான எடுத்துக்காட்டு தான்...

கர்மவீரர் காமராஜர். மனமகிழ்ச்சியுடன் பெருமையுடன் உங்களிடம் பகிர்வது
உங்களில் ஒருவன்.

காந்தியைப்போல காமராஜர் நேர்மையாக வாழ்ந்தார். ஒன்பது ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தவர் தனது அன்னையார் உள்ளிட்ட குடும்பத்தினரை தனது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.
அரசின் ஒரு சிறு சலுகை கூட தனது கடும்பத்திற்கு போய் சேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
காமராஜர் முலமைச்சராக சென்னையில் இருந்தார். 


அவரது அன்னையார் அன்றைய நெல்லை மாவட்டம் விருதுநதரில் அவர்களின் குடிசைபோன்ற வீட்டில் வசித்து வந்தார். காமராஜரின் அன்னையாயிற்றே என சிந்தித்த அதிகாரிகளும் மந்திரிகளும் உத்தரவு பிற்ப்பித்து, குடிநீருக்காக ஒரு குழாயினை காமராஜரின் அன்னையார் குடியிருந்து வீட்டுக்கு இலவசமாக வழங்கிவிட்டனர்.


காமராஜர் நெல்லை மாவட்டம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அன்னையை சந்திக்க சென்றார். குடிநீர் இணைப்பை பார்த்தார். எப்படி வந்தது என கேட்டார். அன்னையார் ‘எனக்கு தெரியாதப்பா, மந்திரி சோன்னாருன்னு; அரிகாரிகள்தான் கொண்டு வந்து போட்டாங்க’ என்றார் .
அதிகாரிகளையும் அமைச்சரையும் அழைத்து கண்டித்த முதலமைச்சர் காமராஜர் அந்த குடிநீர் இணைப்பை துண்டித்து, விடும்படி உத்தரவிட்டார். அவ்வாறு செய்யப்பட்டது.


“எல்லோரையும் போல தெருவுக்கு சென்று தண்ணீர் எடுத்துக்கொள் அம்மா. வீட்டுக்கு குடிநீர் இணைப்பு எடுக்கும் அளவுக்கு உன்மகன் சம்பாதிக்கவில்லை! உனக்கு எதாவது உதவி செய்துவிட்டு, அவன் ஏதாவது தப்பு செய்வான். நான் அந்த தப்பை தட்டிக்கேக்காம இருக்கனும்னு எதிர்பார்பான். அதனால தான் இதெல்லாம் வேண்டாம்னு சொல்றேன்” - இதுதான் காமராஜரின் வார்த்தைகள்,
இது அவருடைய நேர்மையை காட்டும் ஒரு சம்பவம். இப்படி பல உள்ளது.


அவர் வாடகை வீட்டில் இறந்த போது தி.மு.க ஆட்சி தமிழகத்தில் நடந்தது. அப்போது தி.மு.க அமைச்சர் ராஜாராம் என்பவர் காமராஜரின் உதவியாளரிடம் சொன்னார் “தலைவரின் உடலை ஊர்வலத்திற்காக எடுத்து செல்கிறோம். நீங்கள் வீட்டில் எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி பூட்டிக் கொள்ளுங்கள்” - என்று அதற்கு உதவியாளர் சொன்னார் “இங்கே பூட்டிவைப்பதற்கு எதுவும் இல்லை. பூட்டவேண்டிய அவசியம் இல்லை” - என்று.


முப்பது அல்லது முப்பத்தைந்து ரூபாய்கள் மட்டும் அவர் தலைவைத்து படுத்திருந்த தலையணைக்கு அடியில் இருந்தது. இதுதான் காமராஜரின் சொத்து.
இத்தகைய அவரது பன்புதான் காமராஜரின் பெருமைக்கு காரணம். நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு காசுகூட அரசு பணம் அரசியல்வாதியின் குடும்பத்தை நோக்கி நகரத்கூடாது.



அது அதிகாரிகள் மூலமாகவும் வரக்கூடாது ஒப்பந்தக்பாரர்கள் மூலமாகவும் வரக்கூடாது எந்த வகையிலும் வரக்கூடாது! - இதுதான் காமராஜர்.

No comments:

Post a Comment