We Give Everything First

Wednesday, July 29, 2020

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு



இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மானுக்கு ஆதரவாக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 


ஆஸ்கர் விருது வென்ற பிறகு, தனக்கு எதிராக இந்திப் பட உல கில் ஒரு கூட்டம் செயல்படுவ தாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மை யில் புகார் தெரிவித்திருந்தார். இது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இந்நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட் டுள்ள பதிவில், “பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும், அதிக வாய்ப்புகளும் கிடைக்கா மல் இருப்பதற்குக் காரணமாக உள்ளனர் என்று, இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல, உலக அளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்த மளிக்கிறது. 


எல்லைகள் இல்லா இசையை, எல்லைகள் கடந்து இயக்கி, இந்தியாவுக்கே புகழ் சேர்த்த இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரா கச் செயல்படுபவர்கள் கண்டிக் கத்தக்கவர்கள். ஏ.ஆர்.ரஹ்மா னுக்கு எனது மனப்பூர்வமான ஆதரவைப் பதிவு செய்து கொள்கிறேன்” என்று குறிப்பிட் டுள்ளார்

No comments:

Post a Comment