
பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் கணிசமான மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தேர்வெழுதாத மாணவர்களுக்கு கடந்த 27-ம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 290 மையங்களில் 519 மாணவர்கள் தேர்வெழுதினர்.
இதையடுத்து தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல மதிப்பீடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, திருத்து தல் பணிகள் நேற்று முடிக்கப்பட்டன. தொடர்ந்து மதிப்பெண் பட்டி யல் தயாரிப்பு முடிந்து ஓரிரு நாட்களில் மறுதேர்வு முடிவை வெளி யிட திட்டமிட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment