இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் பிரபலமான ஆப்
வாட்ஸ் ஆப் தான்.

செல்போன் சேட்டிங் ஆப்களில் தற்போது பிரபலமாக இருக்கும் வாட்ஸ் ஆப்பில் புதிய வரவு ஸ்டிக்கர்ஸ்
இந்தியர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆப், சில வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியது
இந்தியர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆப், சில வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியது
முகநூல் நிர்வாகத்தில் எப்போது கை மாறியதோ அன்று முதல் ஏதேதோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.முதலில் ஸ்டிக்கர்ஸ் கேலரியில், வித விதமாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டிக்கர்ஸ் கொடுக்கப்பட்டது.அவற்றை டவுன்லோடு செய்து நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால் இப்போது உங்களுக்காகவே ஒரு புதிய ஆப்ஷன் வந்துள்ளது.இனி அவர்கள் கொடுக்கும் ஸ்டிக்கர்ஸ் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை.
எப்படி ஸ்டிக்கரை உருவாக்குவது என்று பாப்போம்
முதலில் Google Playstore-ல் சென்று ஸ்டிக்கர் மேக்கர் (Sticker Maker) என்ற செயலியை டவுன்லோடு செய்யவும்
Link: Click To Download
பின்னர், அதில் ஸ்டிக்கர் உருவாக்க ஒரு ஆப்ஷன் இருக்கும் (Create a new sticker pack). அதை க்ளிக் செய்யவும்.

இது உங்களை ஒரு பேனலுக்கு அழைத்துச் செல்லும். அதில் இந்த ஸ்டிக்கர்ஸ் பேக்கஜுக்கு ஒரு பெயர் வைக்க சொல்லும். இதில் நீங்கள் உங்கள் முகம் கொண்ட 30 வகை ஸ்டிக்கர்ஸ் உருவாக்கலாம்.

நீங்கள் வாட்ஸ்ப் ஸ்டிக்கராக நீங்கள் பயன்படுத்த விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

இனி நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து பேக்கிரவுன்டை அழிக்க அதில் உள்ள கத்திரிகோல் டூல் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்த பின் உங்களது புகைப்படம் ஸ்டிக்கர் போன்று மாறிவிடும்.

இதேபோன்று குறைந்த பட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களில் குறைந்தபட்சம் மூன்று புகைப்படங்கள் இருந்தால் தான் அவற்றை வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் போன்று பயன்படுத்த முடியும்

நீங்கள் உருவாக்கிய போட்டோ ஸ்டிக்கரை கிளிக் செய்து அனுப்பலாம்
பிடித்து இருந்தால் Share செய்யவும் சந்தேகம் இருந்தால் Comment செய்யவும்
Search Tags: WhatsApp Sticker , Stickers Create
No comments:
Post a Comment