We Give Everything First

Saturday, July 18, 2020

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் ஜூலை 27-ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு




மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜூலை 27-ல் தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக, பாமக, மதிமுக, திராவிடர் கழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

இதில் பாமக 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கு களை சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment