We Give Everything First

Saturday, July 18, 2020

40 சதவீத கல்விக் கட்டணத்தை முதல் தவணையாக வசூலிக்கலாம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள், கல்வி கட்டணத்தில் முதல் தவணை யாக 40 சதவீதத்தை ஆக.31-க்குள் வசூலித்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கரோனா ஊரடங்கு காரணமாக தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு கடந்த ஏப்.20-ம் தேதி அரசாணை பிறப்பித்து இருந்தது. இதை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங் களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.


கடந்தமுறை இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக விசா ரணைக்கு வந்தபோது, தவணை முறை யில் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் கல்வி நிறுவனங் கள் சார்பில் அரசிடம் மனு அளிக்க வேண் டும் என்றும், அதை அரசு பரிசீலிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.


இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சி.முனுசாமி ஆகியோர் ஆஜராகினர். தலைமை வழக் கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, ‘‘நடப்பு கல்வியாண்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணமாக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில் மொத்தம் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதில் தற்போது 25 சதவீதத்தையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கும்போது 25 சதவீதத்தையும், எஞ்சிய தொகையை அதன்பிறகும் பெற்றோருக்கு சிரமமின்றி வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. தாமதமாக கல்விக் கட்ட ணம் செலுத்துவோர் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கக் கூடாது. மீறி நட வடிக்கை எடுத்தால் அந்த கல்வி நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நட வடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள் ளது’’ என்றார்.


அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கரோனா காலக்கட்டம் எப்போது முடி வுக்கு வரும் என யாருக்கும் தெரியாது. தற் போதுள்ள சூழலை கருத்தில்கொண்டு எடுக்கப்படும் சில முடிவுகள் பின்பு தவறாகவும் வாய்ப்புள்ளது.
பெற்றோர்களின் கஷ்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களின் கல்வி ஒருபோதும் பாதிப்படைந்து விடக் கூடாது. அதேநேரம் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களின் நிலைமையை யும் யோசிக்க வேண்டியுள்ளது. ஆசிரி யர்களுக்கும், ஆசிரியரல்லாத பணி யாளர்களுக்கும் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட் டுள்ளது.


எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறாத அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த கல்வி யாண்டுக்கான கல்விக் கட்டணமாக கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகை யில் முதல்கட்டமாக 40 சதவீதத்தை ஆக.31-ம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம். 35 சதவீதத்தை பள்ளிகள், கல்லூரிகள் திறந்த தேதியில் இருந்து 2 மாதங்களுக்குள் வசூலித்துக் கொள்ள லாம்.


அதேபோல கடந்த 2019-20 கல்வி யாண்டில் வசூலிக்க வேண்டிய நிலுவைத் தொகையை செப்.30-க்குள் வசூலித்துக் கொள்ளலாம். தனியார் பள்ளிகள், கல் லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ண யக்குழு தனது பணியை ஆகஸ்டில் தொடங்கி 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இயல்புநிலை திரும்பும் வரை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரக் கூடாது. இவ்வாறு உத்தர விட்டுள்ளார்.

No comments:

Post a Comment