பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஜூலை 24) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 16-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 7.9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் ஜூலை 30-ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மதிப்பெண் சான்றிதழை பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 30-ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. தங்கள் பகுதியில் கரோனா தொற்று சூழல் சரியான பின்பும் பள்ளிகளுக்கு சென்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment