சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.606 ஆக உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை மாற்றம் செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக சமையல் கியாஸ் விலை கடந்த மாதம் சென்னையில் ரூ. 569.50 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மானியத்தை வங்கி மூலம் வழங்குவதை ரத்து செய்து நேரடியாக மானியத்தை கழித்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டது.
பொது மக்கள் வங்கிகள் மூலம் மானியம் பெறுவதில் தாமதம் ஏற்படும் என்பதால் மத்திய அரசு மானியத்தை நேரடியாக பொது மக்களுக்கு வழங்கியது.
இதனால் சமையல் கியாசுக்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலை இன்று நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது.
இந்த மாதத்துக்கான விலை சென்னையில் ரூ. 606.50 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த மாதத்தை விட ரூ. 37 அதிகமாகும்.
இந்த மாதமும் மானியத்தை நேரடியாக மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆனாலும் விலை சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.
சமையல் கியாஸ் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 15 நாட்களுக்கு மேலாக நிர்ணயிக்கப்பட்ட விலையே தற்போதும் நீடிக்கிறது.
No comments:
Post a Comment