We Give Everything First

Thursday, June 11, 2020

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார். 

இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. ஐஐஎஸ்சி பெங்களூரு 2ம் இடத்தையும், டெல்லி ஐஐடி 3ம் இடத்தையும் பிடித்துள்ளன.


சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்
இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறுவதற்காக மொத்தம் 5805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பிடித்துள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment