கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் முந்தைய பருவத் தேர்வுகளில் (காலாண்டு, அரையாண்டு) பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான பணிகளை கல்வித்துறை தொடங்கி உள்ளது. இதற்காக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை நாளை மாலைக்குள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் 11ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகளை எழுதவிருந்த மாணவர்களின் வருகை பதிவேட்டையும் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment