We Give Everything First

Sunday, May 31, 2020

பள்ளி விடுதிகளை (School Hostels) 11.06.2020 முதல் திறக்க உத்தரவு


ஜூன் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி விடுதிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும் சில தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன.


 இந்த தேர்வுகள் ஜூன் 1 முதல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் ஜூன் 15ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியானது.


இந்நிலையில் ஜூன் 15 முதல் தேர்வுகள் நடைபெற இருப்பதால் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் மீண்டும் விடுதிகளில் வந்து தங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, தேர்விற்கு நான்கு நாட்கள் முன்னதாக, அதாவது ஜூன் 11 முதல் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விடுதிகளை திறக்க பிற்படுத்தோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment