We Give Everything First

Sunday, May 31, 2020

நான்காவது மண்டலத்தில் இயக்கப்டும் பேருந்து விவரங்கள்

திருச்சி மாவட்டத்தில் இருந்து
180 நகர் - 150 புறநகர் பேருந்துகளுடன்

7 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து துவக்கம்

கலெக்டர் சு.சிவராசு அறிவிப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
தமிழக முதல்வர் அறிவிப்பின்படி திருச்சி *மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பொது பேருந்து போக்குவரத்து நாளை ( 1 ம் தேதி ) துவங்குகின்றது


மக்கள் பயன்பாட்டிற்காக  இந்த பேருந்துகள் திருச்சி,தஞ்சாவூர்,நாகப்பட்டினம்,திருவாரூர்
அரியலூர்பெரம்பலூ* *புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களை  *உள்ளடக்கியும்,நாலாவது மண்டலத்துக்கு அருகில் உள்ள மாவட்டங்களின் எல்லை வரையிலும் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கப்படும்


திருச்சி மாவட்ட *பகுதிகளில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்பகோணம் ) லிட் திருச்சி மண்டலம் மூலம் 50 சதவீத பேருந்துகளும்
60 சதவீத பயணிகளுடன்  180 நகர் பேருந்துகளும்  150 புறநகர் பேருந்துகள் என மொத்தம்  330 பேருந்துகள் இயக்கப்படும்



பேருந்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்
பேருந்தில் பின்படிக்கட்டில் ஏறும்போதும் ,முன்படிக்கட்டில் இறங்கும் போதும் நிச்சயமாக பயணிகள் சமூக இடைவெளியை பயன்படுத்திட வேண்டும்


இவ்வாறு தமது அறிக்கையில் கலெக்டர் சு.சிவராசு கூறியுள்ளார்

No comments:

Post a Comment