We Give Everything First

Monday, May 18, 2020

ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலில் கொழுப்பு தங்காது




தினமும் இரண்டரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் தேவையற்ற கொழுப்பு உடலில் தங்காது. 
இதய நோய் பாதிப்பும் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 




உடல் பருமன், இதய ஆரோக்கியம், நீண்ட ஆயுள் ஆகிய மூன்றுக்கும் ஆரஞ்சு ஜூஸ் அவசியமானது. தினமும் இரண்டரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் தேவையற்ற கொழுப்பு உடலில் தங்காது. இதய நோய் பாதிப்பும் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஜர்னல் ஆப் லிப்பிட் ஆய்வறிக்கையில் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நோபி லிடின் எனும் மூலக்கூறுகள் உடல் பருமனை குறைக்கும் தன்மை கொண்டவை. பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்கவும் செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எலிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டன. அவை உடல் பருமனை தூண்டும் என்பது அதன் மூலம் உறுதிபடுத்தப்பட்டது. 

இன்னொரு பிரிவை சேர்ந்த எலிகளுக்கு ஆரஞ்சு பழத்தில் உள்ளடங்கி இருக்கும் நோபிலிடின் வழங்கப்பட்டது. ஆய்வின் முடிவில் நோபில்டின் உட்கொண்ட எலிகளின் உடல் மெலிந்து போயிருந்தது தெரியவந்தது. அவற்றின் உடலில் உள்ள இரத்த த்தில் கொழுப்பின் அளவு குறைந்திருப்பதும், இன்சுலின் அளவு கட்டுக்குள் இருப்பதும் கண்டறியப்பட்டது. 


இருப்பினும் நோபிலிடின் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய கூடுதல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.


No comments:

Post a Comment