மாலை செய்திகள் இதுவரை
தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு. இன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தில் மே 31-ந்தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
12 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. 12 மாவட்டங்களில் தளர்வுகள் எதும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்: அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு- கமல் பாய்ச்சல்.பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழிற்சாலைகள் 100 சதவிகிதம் முழு பணியாளர்களுடன் இயங்கலாம்- முதல்வர் அறிவிப்பு.100க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் ஆலைகளில் 50 % அல்லது குறைந்தபட்சம் 100 % பேர் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பு 5 சதவீதமாக உயர்த்த முடிவு: நிர்மலா சீதாராமன்.நான்கு நிபந்தனைகளுடன் மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பை 5 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிறப்பு திவால் சட்டம், அனைத்து துறைகளும் தனியார் மயமாகின்றன: நிர்மலா சீதாராமன்.கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்யும் வகையில் நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தெருக்களில் மருந்து தெளிப்பதால் கொரோனா வைரஸ் சாகாது - உலக சுகாதார அமைப்பு தகவல்.தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 320 போலீசாருக்கு கொரோனா தொற்று.மாநிலம் முழுவதும் இதுவரையில் 320 போலீசார் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இஸ்ரேலுக்கான சீன தூதர் திடீர் மரணம்.இஸ்ரேலுக்கான சீன தூதர் வடக்கு டெல் ஆவிவ்-ல் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உள்ள இடங்களில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தனி மையம்.கொரோனா தொற்று உள்ள இடங்களில் தேர்வு எழுத தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மே 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவை மே 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.
பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை.பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் 2 ஊழல் வழக்குகள்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் 2 ஊழல் வழக்குகளை பதிவு செய்ய அந்த நாட்டு தேசிய பொறுப்புடைமை முகமை அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் 10 ஆயிரம் கைதிகளை ரிலீஸ் செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு.மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே 7,200 கைதிகளை ரிலீஸ் செய்துள்ள நிலையில், விரைவில் மேலும் 10 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய இருக்கிறது.
கொரோனா தடுப்பு பணியில் துபாயில் துடிப்புடன் பணிபுரியும் தமிழக டாக்டர் தம்பதி.கொரோனா தடுப்பு பணியில் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார் மற்றும் அவரின் மனைவி துபாயில் துடிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
சிங்கப்பூரில் மேலும் 465 பேருக்கு கொரோனா.சிங்கப்பூரில் புதிதாக 465 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,356 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் - அமெரிக்கா அதிரடி.சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கல்வித்துறைக்கு புதிதாக 12 தொலைக்காட்சிகள் - நிர்மலா சீதாராமன்.கல்வித்துறைக்கு புதிதாக 12 தொலைக்காட்சிகள் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அவமானப்படும் விஷயம் இல்லை- சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி.கொரோனா தொற்று ஏற்பட்டால் அவமானப்பட ஏதும் இல்லை என்று புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறினார்.
ஊரடங்கு தளர்வு - பாகிஸ்தானில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.உள்நாட்டு விமான சேவையை பகுதியளவு செயல்பட பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நிலம், பணப் புழக்கம், தொழிலாளர் நலன் உள்பட 7 அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிர்மலா சீதாராமன்.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிலம், பணப் புழக்கம், தொழிலாளர் நலன் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை - டிரம்ப் அதிரடி பேட்டி.கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
தமிழக அரசின் திட்டத்தை முக ஸ்டாலின் காப்பி அடிக்கிறார் - அமைச்சர் க.பாண்டியராஜன்.தமிழக அரசின் திட்டத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் காப்பி அடிக்கிறார் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை பாஜக அரசால் தடுக்க முடியாது: அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது- ப. சிதம்பரம் கடும்தாக்கு.தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரெயில்கள் மூலம் நேற்று ஒரேநாளில் 2.39 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பினர்.மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களில் நேற்று மட்டும் 2.39 பேர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா கால களப்பணிகள் தொய்வின்றி தொடரும் - முக ஸ்டாலின் அறிக்கை.கொரோனா கால களப்பணிகள் தொய்வின்றி தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முடி திருத்துவோர்களுக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.நல வாரியத்தில் உறுப்பினர்கள் அல்லாத முடி திருத்துவோர்களுக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாகை, தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.ஆம்பன் புயல் அதிதீவிர புயலாக மாறிவருவதால் நாகை, தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி 2872 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 163 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்பட்டதாக தகவல்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று தமிழகத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு, 163 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த அனுமதி - அரசாணை வெளியீடு.சென்னை தவிர நகர்புறங்களில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது.
Source: Internet
No comments:
Post a Comment