We Give Everything First

Monday, May 18, 2020

செய்திகள் இதுவரை 18052020

செய்திகள் இதுவரை


புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது * தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு.

மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிப்பு - தமிழக அரசு



ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு * அணை திறப்பால் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு

ஜூலை 1 முதல் 15 வரை நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு நடைபெறும் என அறிவிப்பு


‘டிக்டாக்’ செயலியை தடை செய்ய வேண்டும் என இந்திய அளவில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.


#Amphan புயலால் 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

➤ அத்தியாவசிய தேவை, அவசரப்பணி, 50% அரசு ஊழியர்களுக்காக மார்ச் 25 முதல் 175 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது!.ஊரடங்கு தளர்வால் இன்று முதல் கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படுகின்றன!.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்.


➤இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36,824 பேர் குணமடைந்துள்ளனர்!.இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3,029 ஆக உயர்வு!.இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96,000-ஐ கடந்தது!.நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,169 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,242 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 157 பேர் உயிரிழப்பு.மொத்த பலி எண்ணிக்கை 3,029 ஆக உயர்வு!.இதுவரை 36,823 பேர் குணமடைந்துள்ளனர்.


➤ஆம்பன் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே ஏறக்குறைய 650 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது;அடுத்த சில மணி நேரங்களில் உயர் தீவிர புயலாக மாறக்கூடும்; புயல் தற்போது வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது! .


➤சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,041, திரு.வி.க. நகர் மண்டலத்தில் 790 பேருக்கு கொரோனா உறுதி - சென்னை மாநகராட்சி.


➤இறுதிக்கட்ட சோதனை... ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு


Source: Internet

No comments:

Post a Comment