அனைத்து வங்கிக் கிளைகளிலும் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படுவதுடன், வாடிக்கை யாளர்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்க வேண்டும் என மாநில அளவிலான வங்கி யாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கு காரண மாக, வங்கிகள் 50 சதவீத ஊழி யர்களுடன் மட்டுமே இயங்கி வந்தன. இதனால், வாடிக்கை யாளர்களுக்கு குறைவான சேவை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
இந்நிலையில், ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. எனினும், வங்கி கள் இனிமேல் 100 சதவீத ஊழியர் களுடன் வழக்கமான நேரத்துடன் செயல்பட தீர்மானிக்கப்பட் டுள்ளது. அத்துடன், வாடிக்கை யாளர்களுக்கு அனைத்துவித மான சேவையும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. எனவே, ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் வங்கிக் கிளைகள் அரசின் உத்தரவை மதித்து அன்றைய தினம் செயல்படாது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்...
கரோனா வைரஸ் தொற்று கார ணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட் டுள்ள பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகள், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி செயல்பட வேண்டும்.
மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வங்கி ஊழியர்கள் பணிக்கு வர வேண் டிய அவசியமில்லை. எனினும், அவர்கள் இதுதொடர்பாக தங்கள் உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
வங்கிகளில் கூட்டம் சேரு வதைத் தடுக்க வேண்டும். வாடிக் கையாளர்கள் ஏடிஎம், ரூபே கார்டுகள் மூலம் பணம் எடுப்பதை வங்கிகள் ஊக்கப்படுத்த வேண்டும். அனைத்து வங்கிக் கிளைகளிலும் போதிய அளவு பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் நடமாடும் ஏடிஎம் மூலம் பணம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
கரோனா வைரஸ் பரவு வதைத் தடுக்க வங்கிக் கிளை களில் அனைவரும் முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி களை பயன்படுத்துதல், சமூக இடைவெளியைக் கடைபிடித் தல் உள்ளிட்ட பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழகத்துக்கான மாநில அள விலான வங்கியாளர்கள் கூட் டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.மொகந்தா வெளி யிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment