We Give Everything First

Tuesday, July 14, 2020

E-Book - [ இயற்கை வைத்தியம் - தமிழ்வாணன் ]




இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன், ஒரு குறிப்பிட்ட நோய்க்குக் கூறப்பட்டுள்ள சிகிச்சைகளை மட்டும் படித்துப் பார்த்துவிட்டு, அந்தச் சிகிச்சைகளைக் கையாளத் தொடங்கி விடக்கூடாது. அப்படித் தொடங்கினால், சிகிச்சைகளின் முழுப் பயனையும் பெறமுடியாது. இந்நூல் முழுவதையும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது (முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரையில்) படித்தே ஆகவேண்டும். அப்படிப் படித்துத் தெளிவுபெற்று, அதன்பின் சிகிச்சைகளில் இறங்கினால், இயற்கை வைத்தியத்தினால் குணமாக்க இயலாத வியாதி எதுவும் இல்லை என்பதை நீங்கள் உங்கள் அனுபவத்தாலேயே அறிந்து கொள்ளலாம். 

  
இயற்கை வைத்தியத்தின் அடிப்படைத் தத்துவங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு விட்டால் நம்முடைய நோய்களுக்கு வைத்தியரிடம் போகாமல் நாமே வைத்தியராக இருந்து கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் மருந்துகளுக்கோ மூலிகைகளுக்கோ வேலையே கிடையாது! 

  
நோயாளியின் உடம்பில் உள்ள பிராணசக்திதான் உண்மையிலேயே நோய்களைக் குணப்படுத்துகிறது. அந்தப் பிராணசக்தி தடையின்றி வேலை செய்வதற்கான சூழ்நிலைகளை இயற்கை வைத்தியர் தோற்றுவிக்கிறார், அவ்வளவுதான்! 

  
நாம் காப்பி, தேநீர் போன்ற பானங்களை அறவே நீக்க வேண்டும். சாராயம் பெரிய அளவில் செய்கிற அதே தீங்கை, காப்பியும் தேனீரும் சிறிய அளவில் செய்கின்றன. அதாவது, நமக்கு உள்ளே சேமித்து வைக்கப்பட்டிருக்கிற பிராண சக்தியை அவை வீணே வெளிப்படுத்தி விரயம் செய்கின்றன! 

  
பல ஆண்டுகளாய்த் தவறான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்து வந்ததன் காரணமாக உடம்பினுள்ளே சேர்ந்து போயிருக்கும் அழுக்குப் பொருள்களையும், நச்சுப் பொருள்களையும் அகற்றி அப்புறப்படுத்துகிற ‘உடல் சுத்தித் தொழிலாளர்கள்’ தாம் நோய்க்கிருமிகள் எனப்படுபவை - என்பது இயற்கை வைத்தியன் ஒப்புக்கொள்ளுகிற ஆரோக்கிய விஞ்ஞானத்தின் கோட்பாடு.

  
மேனாட்டு மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படுகிறவர் கிறிஸ்து பிறப்பதற்கு 460 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஹிப்போக்ரேட்டஸ். இருமல், காய்ச்சல், வலி இவையெல்லாம் உண்மையில் வியாதிகள், அல்ல - வியாதிகளைப் போக்குவதற்காக உடம்பில் ஏற்படும் நிகழ்ச்சிகள் என்று முதலில் கூறியவர் அவர் தான். 

  
அடுத்தபடியாக, 'உணவே உன்னுடைய மருந்தாக இருக்கட்டும்; மருந்தே உன்னுடைய உணவாக இருக்கட்டும், (Let food be the medicine and let medicine be the food)' என்றார் ஹிப்போகிரேட்டஸ். நோயின்றி வாழும் மக்களை நோக்கிக் கூறப்பட்ட அறிவுரை இது. இப்போது நீ நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இதேபோல் எதிர்காலத்திலும் நீ நோயின்றி வாழவேண்டுமானால், ‘மருந்துபோல் உதவக்கூடிய உணவுகளையே நீ உட்கொள்ள வேண்டும்’ - இதுதான் அந்த அறிவுரையின் கருத்து.
  

‘உணவாகப் பயன்படுத்த முடியாத எதையுமே மருந்தாகப் பயன்படுத்தாதே’ என்பது ஹிப்போகிரேட்டஸின் கட்டளை. அவர் வகுத்துக் கொடுத்த இந்த அடிப்படைக் கொள்கையை நூற்றுக்கு நூறு பின்பற்றுகிறவர்கள் இயற்கை வைத்தியர்கள் தான்.



No comments:

Post a Comment