
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி யில், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, கோயி லுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சவ்பால் கூறியதாவது:
ராம ஜென்ம பூமியின் முழு வர லாறு, ஆதாரங்கள், ஆவணங்கள், உண்மைகள் என மொத்த வரலா றும் அடங்கிய ‘டைம் கேப்சியூல்’ ராமர் கோயில் கட்டும் இடத்துக்கு 2,000 ஆழத்தில் பதிக்கப்பட உள் ளது. இந்த டைம் கேப்சியூல், தாமி ரத்தில் செய்யப்பட்ட குடுவைக் குள் வைத்து நிலத்துக்குள் புதைக் கப்படும். இதன்மூலம் எதிர்காலத் தில் கோயில் தொடர்பான சர்ச்சை கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நடத்திய போராட் டம் மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. எனவே, எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள் ளும் வகையில், சர்ச்சைகள் ஏற்பட் டால் அதற்கு தீர்வாகவும் இந்த டைம் கேப்சியூல் அமையும். வருங் காலத்தில் ராமர் கோயிலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய யார் நினைத் தாலும், உண்மைகளை அறிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் புதிய சர்ச்சைகள் உரு வாவது தடுக்கப்படும். இவ்வாறு காமேஷ்வர் சவ்பால் கூறினார்.
No comments:
Post a Comment