
யானைகளுக்கு அதன் உருவத்திற்கு ஏற்ப மூளையும் பெரியதாக உள்ளது. இதன் ‘தற்காலிக மடல்’ (temporal lobe) பகுதி நினைவகத்தை கட்டுப்படுத்துகிறது. இது அதிக அளவிலான மடிப்புகளை கொண்டுள்ளதால் இதன் நினைவாற்றல் சக்தி வாய்ந்ததாக உள்ளது.
இந்த நினைவாற்றலை கொண்டு எங்கே உணவு மற்றும் தண்ணீர் உள்ளது என்று ஒரு வரைபடத்தையே நினைவில் வைத்திருக்கும். மேலும் தன் மந்தையில் உள்ள 200 க்கும் மேற்பட்ட யானைகளின் தனித்துவத்தை அறிந்திருக்கும்.மேலும் தனக்கு யார் நண்பர் மற்றும் எதிரி என்று அதன் நினைவில் இருக்கும்.இதன் நினைவாற்றல் நாம் நினைப்பதை விட அபாரமானது.
உங்களுக்கு தெரியுமா?
- பெண் யானைகள் 50 வயது வரை குழந்தையை பெற்றெடுக்கும்.
- இதன் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
No comments:
Post a Comment