We Give Everything First

Monday, July 20, 2020

குழந்தைகளை விளையாட விடுங்க... கல்வித்திறன் அதிகரிக்கும்...




நெதர்லாந்தில் உள்ள வியூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவ
தனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வி திறனுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தது. இவர்கள் நேரடியாக குழந்தை களை இந்த ஆய்வில் பங்கேற்க வைக் காமல், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை வைத்து ஆராய்ச்சியை - மேற்கொண்டனர். 

அதா வது, அமெரிக்கா, கனடா, தென் னாப்ரிக்கா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட சுமார் 12 ஆய்வுகளின் முடிவுகளை கொண்டு குழந்தைகளின் உடல் அசைவுக்கும், அவர்களது கல்வித்திறனுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது என கண்டறிந்துள்ளனர்.


இந்த ஆய்வின்படி, எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் உட்கார்ந்திருக்கும் குழந்தைகளைவிட கல்வித் திறனில் சிறந்து விளங்குவார்கள் என நிரூபிக்கப்பட்டுள் ளது. ஏனெனில், விளையாடும்போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. 


எனவே, மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கி றது. மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால், ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித்திறன் சிறப்பாக இருக் கிறது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment