We Give Everything First

Friday, July 31, 2020

தினகரன் தலையங்கம்(31.07.2020) - எட்டாக்கனி


புதிய தேசிய கல்விக்கொள்கையை வெளியிட்டு இருக்கிறது மத்திய அரசு. அனைவர் கவனமும் கொரோனா பக்கம் திரும்பி இருக்கும் நேரத்தில் சத்தமில்லாமல் பல யுத்தங்களை நடத்தி வரும் மத்திய அரசு, தற்போது கல்வி மீதான தனது பார்வையை திருப்பி, 34 ஆண்டுகளுக்கு பின் அதில் பல மாறுதல்களை செய்து நவீனமயத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக தெரிவித்து இருக்கிறது. 


5ம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கல்வி என்பது வரவேற்கத்தக்கது. குழந்தைகள் தங்கள் தாய் மொழியிலேயே பாடங்களை படிக்கும்போது இன்னும் ஆர்வமாக எளிதாக கற்க முடியும். ஆனால் 12 ஆண்டு பள்ளிக்கல்வியை, 15 ஆண்டுகளாக மாற்றியிருப்பது தான் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தியா 2.50 லட்சம் கிராமங்களை கொண்ட நாடு. இங்கு பல கிராமங்களில் பள்ளிக்கூடமே இல்லை. 


மாணவர்கள் பள்ளிக்கு செல்வதே முதல் வகுப்பில் இருந்துதான். நகர வாழ்க்கை என்பது வேறு. அப்படி இருக்கும் போது கிராமப்புற மாணவர்கள் 3 வயதில் பள்ளிக்கு எங்கு செல்வார்கள், எப்படி செல்வார்கள் என்ற கேள்வி முன்வந்து நிற்கிறது.


இரு மொழிக்கல்வி அமலில் இருக்கும்போது இப்போது மும்மொழி கொள்கை அவசியம் என்ன? இதனால் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து இன்னொரு மொழியையும் மாணவர்கள் கற்க வேண்டும். அது இந்தி அல்லது சமஸ்கிருதம் மட்டுமே படிக்க அல்லது மாணவர்கள் மத்தியில் திணிக்கும் வழியாக மாறிவிடும் என்ற அச்சம் எழாமல் இல்லை. 


ஏனெனில் மும்மொழி பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படுவது கல்வி கற்கும் மாணவர்களை திசை திருப்பும் செயலாக அமைந்து விடும். அந்த வயதில் தான் படிப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டத்தொடங்குவார்கள். அப்போது தொழிற்கல்வியை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை, கல்வித்திறன் குறைந்த மாணவர்களின் சிந்தனையை தொழிற்கல்வி பக்கம் திருப்பி விடும்.


மேலும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு பின் இனிமேல் கல்லூரியில் சேரக்கூட நுழைவுத்தேர்வு என்று அறிமுகப்படுத்துவது வியாபாரமயமாக்கலின் உக்தி. மேலும் எப்போது வேண்டுமானாலும் கல்லூரி படிப்பில் இடைநின்று விட்டு, தேவைப்படும் காலத்தில் மீண்டும் கல்வியை தொழிற்கல்வி பக்கம் திருப்பி விடும். டரலாம் என்று அறிவித்து இருப்பது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்க வழிவகை செய்யும். 


புதிய கல்விக்கொள்கையை மேலோட்டமாக பார்த்தால் ஏழை, எளிய மக்கள் படிப்பு எட்டாக் கனியாக மாற்றிவிடும் ஒன்றாகத்தான் தெரிகிறது. அப்படி படித்தாலும் அவர்கள் தொழிற்கல்விக்கு மட்டுமே செல்லும் வகையில் புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது.

No comments:

Post a Comment