இத்தனை ஆண்டுகள், செல்போன்களை மாணவர்கள் பயன்படுத்த தடை விதித்த பெற்றோர்கள், மற்றும் பள்ளிகள், இப்போது அதை வாங்கித் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.. ஏழை மற்றும் மலைவாழ் மக்களுக்கு இது சாத்தியமா ?
கல்வி தொலைக்காட்சி பார்த்துக் கொள்ளுங்கள் என்று அரசு சொல்லி தப்பித்துக் கொண்ட அவலம் ஒருபுறம்.
இந்த சூழலிலும் கல்விக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மறுபுறம்.
வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தால் மூன்று செல் போன்கள் மற்று நெட்டு வசதிகள் செய்து தர முடியுமா ? இது மாணவர்கள் மத்தியில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படாதா ?
அரசு இலவச செல் போன்கள் அனைவருக்கும் தர முடியுமா ? அது சாத்தியமா ?
மாணவர்கள் படிக்கின்றனரா அல்லது கேம் விளையாடுகின்றனரா என்று பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியுமா ?
கேரளாவில் ஒரு மாணவி ஆன் லைன் வகுப்பில் ஈடுபட முடியவில்லை என்று மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இதுதான் கல்விப் புரட்சியா ?
கல்விக் கொள்ளையை மைய்யமாக வைத்தே இந்த ஆன்லைன் இணைய வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளது.
பல மலைப் பிரதேசங்களில் தனியார் பள்ளிகள் குறைவு. அங்கு அதிகமாக அரசு பள்ளிகள் மட்டுமே உள்ளது.
ஆன்லைன் இணைய வகுப்பில் சேர்ந்து படிக்க வேண்டிய நிலையில் அங்கு செல் டவர்கள் சரியாக கிடைக்கும் சூழல் இல்லை.
மேலும் வீட்டில் இருந்து மாணவர்கள் பள்ளிகளில் சென்று ஆசிரியர் கண்காணிப்பில் படிக்கும் ஆரோக்கியமான சூழல் வீட்டில் ஸ்மார்ட் வகுப்பில் சாத்தியமா ?
பிள்ளைகளுக்கு ஒரு மாற்று சூழல் தேவை இல்லையா ?
கேரளாவில் உள்ள ஸ்வேதா டீச்சர் மாதிரி எத்தனை பேர் மாணவர்களுக்கு கிடைப்பார்கள் ?
பள்ளிக்கு வரும் மாணவர்களை, அவர்கள் வீடுகளில் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் இருந்து வெளியே கொண்டு வந்து தன்வசப்படுத்த வேண்டிய முதல் வேலை ஆசியர்களுக்கு உண்டு. அதன்பிறகே அவர்களுக்கு பாடம் சொல்லித் தர வேண்டும்.
இனி அது சாத்தியமா ?
வீட்டிலேயே இருக்கும் தாய்மார்கள் ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபடும் பிள்ளைகளை கண்காணிக்க முடியாத நிலையில், தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டு கண்காணிக்க முடியுமா ?
இந்த ஆன்லைன் இணைய வகுப்புகள் கொரோனா பதிப்பு கால கட்டத்தில் மட்டுமே, அதன்பின் வழக்கமான வகுப்புகள் தொடரும் என்று மாண்புமிகு கல்வி அமைச்சர் கருத்து தெரிவிக்கின்றார் என்றால், என்னுடைய கேள்வி, பள்ளிகள் வழக்கம் போல செயல்பட துவங்கினால், செல்போன்களை மீண்டும் மாணவர்களிடம் இருந்து பெற்றோர்கள் திருப்பி வாங்கிவிட முடியுமா ?
இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து கூட கல்விகளை முறையாக வழக்கமாக முறையில் துவங்கலாம்.
அதை சரி செய்யக்கூடிய ஆசிரியர்கள் நம்மிடம் உள்ளார்கள். மாணவர்களும் தங்களை தயார் செய்து கொள்ள முடியும்.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புகள் வரையிலாவது இந்த ஆன்லைன் இணைய வகுப்புகளை புகுத்தாமல் இருக்கலாம்.
அரசு இதைப்பற்றி உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் !
தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )
No comments:
Post a Comment