டிஜிட்டல் யுகத்தில் என்ன தான் நாம் வாழ்ந்தாலும் , தொடர்ந்து டிஜிட்டல் டிவைஸ் என்றழைக்கப்படும் செல்போன் , டேப் போன்ற பொருட்களை அதிகளவு பயன்ப டுத்தினால் நம் கண்களுக்கும் , மூளைக்கும் பாதிப்பு ஏற்படும் என பல ஆய்வுகள் தெளிவுபடுத்தி வருகின்றனர் .
கடந்த 40 ஆண்டுக்கு முன் அதாவது டிஜிட்டல் டிவைஸ்கள் அதிகம் புழக்கத்துக்கு வருவதற்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆய்வு செய்தனர் . அதில் வகுப்ப றையில் 10குழந்தைகளில் 2 அல்லது 3 குழந் தைகளுக்கு தான் கிட்டப்பார்வை குறைபாடு காரணமாக கண் கண்ணாடி போடும் நிலை இருந்தது.

கடந்த 10 ஆண்டாக டிஜிட்டல் டிவைசஸ் புழக்கத்துக்கு வந்தபின் மொபைல்போன் , டிஜிட்டல் மானிட்டர் . டேப்களால் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக தூரப்பார்வை பிரச்னை 10ல் 7 குழந்தைகளுக்கு இருப்ப தாக அந்த ஆய்வு கூறுகிறது.
இது தவிர குழந்தைகளின் கண்கள் , மண்டை ஓடுகள்மிகவும் மென்மையானவை. இதனால் செல் போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் குழந்தைகளின் கண் , தலையை எளிதில் தாக்கும் .
இப்படி ஒரு அபாயகரமான சூழல்நிலை நிலவும் போது கொரோனா நோய் தொற்று லாக்டவுன் காரணத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன் லைன் வகுப்புகளை துவங்கி உள்ளன. இத னால் குழந்தைகளுக்கு கண் , உடல் , மனம் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளாக ஆய்வறிஞர்கள் எச்சரிக்கின்றனர் .
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும் , மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலீம் கூறியதாவது: ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைக ளுக்கு பாதிப்பு இருப்பது உண்மை தான் . அதேவேளையில் கல்வி என்பதும் அவ சியமாகிறது.
ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் . ஹெட்போன் மூலம் பாடங்களை கவனிக்கின்றனர் . கண்பார்வையும் , செல் போன் டிஸ்பிளேவுக்கு அருகே இருப்பதால் கண்கள் . காதுகளில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்புகள் பலவீனம் அடையும் .
எனவே டேப்லட் கம்ப்யூட்டர் மானிட்டர் பயன்படுத்தினால் ஓரளவு பிரச்னையிருக் காது. இதனால் உடல் ரீதியாக மட்டுமல் லாமல் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்னை களை குழந்தைகள் சந்திக்கத்துவங்குவர் . தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவால் அரசு பள்ளி மாண வர்களின் கல்வித்திறன் கேள்விக்குறியாகும் .
ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் குழந் தைகளுக்கு ஒரு வித பதட்டம் வரும் , மன அழுத்தம் ஏற்படும் . சமூகத்தில் நெருங்கி பழக மாட்டார்கள் . எனவே ஆன்லைன் வகுப் புகளை ஆராய்ந்து முறையாக நடத்துவதே மாணவர்களுக்கு நலன் பயக்கும் ” என்றார் .
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி கல்விக்குழு உறுப்பினர் இளங்கோ கூறியதாவது: பள்ளிகளில் ஆன்லைன் வகுப் பால் மாணவர்கள் உடல் , மனம் ரீதியாக பாதிக்கப்படுவர் . அரசு பள்ளிகளில் இல்லை. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு படிக்க வாய்ப்பில்லாமல் போகிறது.
தனியார் பள்ளி மாணவர்கள் படிக்கும் சூழல் உருவாகிறது. இதனால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு அதிகரிக்கும் . என்னைக்கேட்டால் ஆன்லைன் வகுப்பு தேவையில்லை.
எந்த வொரு குழந்தையையும் ஆசிரியர்கள் அதன் தனித்திறமையை பார்த்து தான் கையாள்வர் . ஆன்லைன் வகுப்பில் அப்படி செய்ய முடியா து? ஆன்லைன் வகுப்பில் 40 பேர் இருக்கி றார்கள் என்றால் யார் கேள்வி கேட்கிறார்கள் என்பதை கண்டறியமுடியாது. மாணவர்கள் பாடத்தை கவனிக்கிறார்களா என்பதை கூட ஆசிரியர்களால் தெரிந்து கொள்ள முடியாது. ஆன்லைன் வகுப்புகள் என்பது கல்லூரி முதுகலை மாணவர்களுக்கு மட்டுமே சரி யானதாக இருக்கும் என்றார் .

No comments:
Post a Comment