தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷை மாற்றம்
செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உடையவர்.
No comments:
Post a Comment