We Give Everything First

Saturday, June 13, 2020

கொரோனா தடுப்புக்கு மைக்ரோ திட்டம்:சென்னை மாநகராட்சி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சி மைக்ரோ திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்து உள்ளார்.


இது குறித்து மாநகராட்சி கமிஷனர் தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மைக்ரோ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 


இத்திட்டத்தின் படி 15 மண்டலங்களில் 200 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சென்னையில் 11,500 பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துவர் . நோய் தொற்று பாதித்த நபர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். இவ்வாறு கமிஷனர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment