We Give Everything First

Saturday, May 16, 2020

Cyclone Amphan Update



Cyclone Amphan Update:






நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது
தற்போது இது ஒரிசாவின்  பாரதீப் பகுதியிலிருந்து சுமார் 1100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது;இன்று மாலை இது புயலாக வலுவடையக்கூடும்


தற்போதைய நிலவரப்படி நாளை வரை வடமேற்கு திசையில் இது நகர்ந்து பின்னர் வடக்கு வடகிழக்கு ஆகிய திசைகளில் வரும் 18, 19 ஆம் தேதிகளில் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரக்கூடும்
வரும் 16, 17 ஆகிய தேதிகளில் தெற்கு வங்ககடல் பகுதிகளுக்கும், 17, 18 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கும், 19, 20 ஆகிய தேதிகளில் வடக்கு வங்ககடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல்


வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், விருதுநகர் மாவட்டம் கரியப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ மழையும்,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை வாடிப்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ மழையும்  பதிவாகியுள்ளது
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்,அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 29டிகிரி செல்சியஸ் பதிவாகும்

🔴🔴 BREAKING | தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்
சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது 'ஆம்பன்' புயல்
வடமேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல்

"Stay Home , Stay Safe"

No comments:

Post a Comment