We Give Everything First

Sunday, May 24, 2020

அழகான சருமத்திற்கு ரோஜா இதழ்கள் போதும்


அழகான சருமத்திற்கு ரோஜா 
இதழ்கள் போதும்


ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் 
புது பொலிவினை கொடுக்கும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய 5 வகை 
அழகு குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.


1. சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைக்கவும். பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால், சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.


2. முகப்பருக்கள் மறைய அரைத்த ரோஜா இதழ்களை ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தயிரை கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 20 நிமிடங்கள் வைத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து விடும். இந்த முறையை தினமும் செய்து வரலாம்.


3. ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ்களை எடுத்து வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, இந்த கலவையை உங்கள் உதட்டில் நன்றாக அப்ளை செய்வதினால், உதடு பிங் நிறமாக மாறும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.


4. சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாக காணப்படும்.


5. சருமம் பொலிவுடன் இருக்க, சருமத்தில் உள்ள கருவளையம் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி சருமம் என்றும் மென்மையாகவும், அழகாகவும் மாற, ஒரு கிளீன் பவுலை எடுத்து, ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ், ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் அழகாக காணப்படும். 


Source:Internet

No comments:

Post a Comment