
மித்ரன் செயலி இந்தியாவில் டிக்டாக்கின் போட்டியாளராக உருவாகி வருகிறது. இந்த செயலி ஒரு மாதம்தான் பழையது, இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 50 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
சமீப காலமாக, இந்தியாவில் டிக்டாக் பற்றிய பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. சீனாவுக்கு எதிரான உணர்வுகள் காரணமாக, மக்கள் தொடர்ந்து டிக்டாக்கிற்கு 1 நட்சத்திர மதிப்பீட்டை வழங்குகிறார்கள்.
இவை அனைத்தையும் மீறி, பெரும்பாலான மதிப்புரைகள் பின்வருமாறு - "I am glad this is an Indian platform." அதாவது, இது ஒரு இந்திய தளம் என்று பயனர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். பயனர்களைப் பற்றிய மதிப்பாய்வைப் பெற்ற பிறகு, டெவலப்பர் குறைபாடுகளை விரைவில் மேம்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு இந்த தளத்தை சிறந்ததாக ஆக்க வேண்டும். இல்லையெனில் பயனர்கள் பொறுமையை தவித்து வேரொரு செயலிக்கு மாறக்கூடும்.
மித்ரன் செயலி என்றால் என்ன?
இது "உலகெங்கிலும் உள்ளவர்கள் பதிவிட்ட குறுகிய வீடியோக்களைக் கொண்டு மக்களை மகிழ்விக்கக் கூடிய ஒரு தளத்தை உருவாக்குவதும், அவர்களின் வீடியோக்களை உருவாக்க மற்றும் ஷேர் செய்ய மக்களை ஊக்குவிப்பதும் இந்த செயலியின் நோக்கமாகும்."
மித்ரன் செயலியை எப்படி பதிவிறக்குவது?
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனராக இருந்தால், Google Play ஸ்டோரிலிருந்து இந்த செயலியை பதிவிறக்கலாம். இந்த செயலி பதிவிறக்கத்திற்கு இலவசமாக கிடைக்கிறது. இந்த நேரத்தில், இது Apple App Store-ல் பதிவிறக்குவதற்கு கிடைக்கவில்லை.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட மித்ரன் செயலிக்கு நேர்மறையான மதிப்பீடு வழங்கப்படுகிறது. மதிப்பீட்டைக் கொடுக்கும் போது, பல பயனர்கள் இந்த செயலியில் பல பிழைகள் மற்றும் பல அம்சங்கள் இல்லை என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் இந்த செயலியை ஆதரிக்கிறார்கள். இந்த மித்ரன் செயலி ஐ.ஐ.டி ரூர்க்கியின் மாணவர் சிவாங்க் அகர்வால் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, கூகுள் பிளே இலவச செயலிகளின் தரவரிசையில் மித்ரன் ஆப் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், ஆரோக்ய சேது செயலி முதலிடத்திலும், டிக்டாக் இரண்டாமிடத்திலும் உள்ளது.
மதிப்பீட்டைப் பற்றி பேசுகையில், மித்ரன் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் நேர்மறையான மதிப்புரைகளைப் பெற்றுள்ளது. மேலும், இந்த செயலி தற்போது 4.7 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பல பயனர்கள் பிழைகள், எடிட்டிங் போன்ற இந்த செயலியின் சில அம்சங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறினர். இந்த செயலியின் login ஆப்ஷன்கள் தரமற்றது என்று சிலர் கூறினர். இது தவிர, செயலியின் ஆடியோவும் குறைவாகவே உள்ளது.
மித்ரன் செயலி என்றால் என்ன?
Mitron app ஒரு இலவச குறுகிய வீடியோ தளமாகும். இந்த மேடையில் நகைச்சுவையுடன் தங்கள் புதுமையான வீடியோ உள்ளடக்கத்தை வழங்கக்கூடியவர்களுக்காக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆப் கிரியேட்டர்ஸ் கூறுகிறது.
ஒரு மாதத்திற்குள், இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் 50 லட்சத்திற்கும் மேலாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இவ்வளவு சீக்கிரம் பிரபலமடைவதற்கு காரணம், இந்தியாவில் மக்கள் மத்தியில் கோலூன்றி வரும் டிக்டாக் எதிர்ப்பு உணர்வு. ஆம், யூடியூப் வெர்சஸ் டிக்டாக் சர்ச்சையில், ஃபைசல் சித்திகியின் ஆசிட் வீச்சு வீடியோ பெரும் தக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் டிக்டாக்கிற்கு எதிராக திரும்பினர். இது மட்டுமல்லாமல், மக்கள் இந்த செயலியைப் பற்றி எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்தனர். இந்த செயலி தற்போது 1-நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனராக இருந்தால், Google Play ஸ்டோரிலிருந்து இந்த செயலியை பதிவிறக்கலாம். இந்த செயலி பதிவிறக்கத்திற்கு இலவசமாக கிடைக்கிறது. இந்த நேரத்தில், இது Apple App Store-ல் பதிவிறக்குவதற்கு கிடைக்கவில்லை.
மித்ரன் செயலியை எப்படி பயன்படுத்துவது?
இந்த செயலி பிரபலமடைவதற்கு ஒரு காரணம், டிக்டாக்கைப் போலவே இந்த செயலியை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது. டிக்டாக்கைப் போலவே, கணக்கையும் உருவாக்காமல் இந்த செயலியை பதிவிறக்குவதன் மூலம் வீடியோக்களையும் பார்க்கலாம். ஆனால் வீடியோவைப் பதிவேற்ற, கட்டாயம் கணக்கை உருவாக்க வேண்டும்.
இந்த செயலி பிரபலமடைவதற்கு ஒரு காரணம், டிக்டாக்கைப் போலவே இந்த செயலியை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது. டிக்டாக்கைப் போலவே, கணக்கையும் உருவாக்காமல் இந்த செயலியை பதிவிறக்குவதன் மூலம் வீடியோக்களையும் பார்க்கலாம். ஆனால் வீடியோவைப் பதிவேற்ற, கட்டாயம் கணக்கை உருவாக்க வேண்டும்.
No comments:
Post a Comment