We Give Everything First

Wednesday, May 27, 2020

ஜூன் மாத ரேஷன் பொருட்களுக்குமே 29 இல் டோக்கன்- தமிழக முதல்வர் அறிவிப்பு!

♦ஜூன் மாத ரேஷன் பொருட்களுக்குமே 29 இல் டோக்கன்- தமிழக முதல்வர் அறிவிப்பு!


📍குடும்ப அட்டை தாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருள்களுக்கு மே 29ஆம் தேதி அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

📍இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையின்றி ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்றும், அதனை ஜூன் 1 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

📍அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் போன்றவற்றை விலையின்றி பெற்றுக்கொள்ளலாம். 

📍இதற்கான டோக்கன் வரும் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment