மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும்- தமிழக அரசு
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மே 18-ந்தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் வாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்கள் செயல்படும். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அலுவலக பணிக்கு வராத பணியாளர்கள் மின்னணு முறையில் அலுவலகத்துடன் இணைந்திருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக பேருந்து வசதி செய்து தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"Stay Home , Stay Safe"
No comments:
Post a Comment